புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கரோனா பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை நகரம் வடக்கு 5ஆம் வீதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவருக்கு கடந்த மே 29ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணியார் மருத்துவமனை வளாகத்திலுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், ஞாயிற்றுக்கிழமை பகலில் உயிரிழந்தார்.
அவரது சடலம் உறவினர் முன்னிலையில் பாதுகாப்பான முறையில் இறுதிச் சடங்குகள் இன்றி ஞாயிற்றுக்கிழமை மாலை எரியூட்டப்பட்டது.
அவருக்குத் தொற்று ஏற்பட்ட விதம் குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது முதலாவது உயிரிழப்பாகும்.
16 பேர் குணமடைந்துள்ளனர். 13. பேருக்கு சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.