தற்போதைய செய்திகள்

ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி

DIN

புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட் இன்று வியாழக்கிழமை விண்ணில் பாய்ந்த சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு ராக்கெட் பயணம் தோல்வியில் முடிந்தது.

புவி கண்காணிப்புப் பணிகளுக்காக இஓஎஸ்-03 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடபட்டது. ஆனால், கரோனா பரவலால் ராக்கெட் ஏவுதல் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நோய்த்தொற்று பரவல் சற்று தணிந்துள்ள நிலையில், மீண்டும் திட்டப்பணிகளை இஸ்ரோ முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி இஓஎஸ்-03 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கான இறுதிக் கட்டப் பணிகளில் விஞ்ஞானிகள் குழுவினா் ஈடுபட்டு வந்தனர். இதற்கான 26 மணி நேர கவுண்ட் டவுன் புதன்கிழமை அதிகாலை 3.43 மணிக்கு தொடங்கியது. 

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், கிரையோஜெனிக் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வி அடைந்தது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT