ஹஜ் பயணம்: ஜிஎஸ்டி, வருமான வரி விலக்களிக்க திருமாவளவன் வலியுறுத்தல் 
தற்போதைய செய்திகள்

ஹஜ் பயணம்: ஜிஎஸ்டி, வருமான வரி விலக்களிக்க திருமாவளவன் எம்பி வலியுறுத்தல்

ஹஜ் பயணத்திற்கு ஆகும் செலவுக்கு ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

DIN

ஹஜ் பயணத்திற்கு ஆகும் செலவுக்கு ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்தை தொடங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 21-இல் இருந்து 10-ஆக மத்திய அரசு குறைத்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹஜ் புனித பயணத்திற்கு ஆகும் செலவிற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஹஜ் பயணிகள் மீண்டும் சென்னை விமானத்திலிருந்து செல்ல அனுமதிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு 4000 முதல் 4500 பேர் வரை ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டு வருவதாகவும், தற்போது ஹஜ் பயணத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள கொச்சின் விமான நிலையம் சென்னையிலிருந்து 700 கி.மீ.க்கு அப்பால் உள்ளது மிகுந்த சிரமத்தை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசு இதுதொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

SCROLL FOR NEXT