முகப்பு
தற்போதைய செய்திகள்

சசிகலாவிற்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு சிகிச்சை

பெங்களூருவில் சிறையிலுள்ள சசிகலா, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
சசிகலா (கோப்புப்படம்)
பகிர்:

பெங்களூருவில் சிறையிலுள்ள சசிகலா, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்காண்டு கால சிறைவாசத்திலிருந்து வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சர்க்கரை, தைராய்டு, காய்ச்சல் பாதிப்புகளுடன் மருத்துவமனை அழைத்துவரப்பட்ட சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அவர் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →