மேட்டூர் அணை நீர்மட்டம்: 94.26 அடி
மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை 94.97அடியிலிருந்து 94.26 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை 94.97அடியிலிருந்து 94.26 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 489 கன அடியிலிருந்து 315 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 57.65 டிஎம்சி ஆக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.