துறையூர் அரசு மருத்துவமனைக்கு 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அளிப்பு 
தற்போதைய செய்திகள்

துறையூர் அரசு மருத்துவமனைக்கு 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அளிப்பு

துறையூர் அரசு மருத்துவமனைக்கு 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

துறையூர்: துறையூர் அரசு மருத்துவமனைக்கு 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஏசிடி கிராண்ட்ஸ், ஸ்வாஸ்த் ஆகிய அமைப்புகளின் நிதியுதவியுடன் ரோட்டரி இந்தியா, சென்னை வடக்கு ரோட்டரி சங்கம், யுனைடைட் வே பெங்களூரு ஆகியன இணைந்து செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் துறையூர் ரோட்டரி சங்கம் வழியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துறையூர் எம்எல்ஏ செ.ஸ்டாலின்குமார் தலைமை வகித்தார். துறையூர் ரோட்டரி சங்க தலைவர் என். கணேசமூர்த்தி, திட்ட தலைவர் ஏ. சரவணன், திட்ட செயலர் ஜி. முரளி, மண்டல ஒருங்கிணைப்பாளர் பி. பாலசுப்பிரமணியன், ரோட்டரி மாவட்டம்-3000 உதவி ஆளுநர் ஏ. நாகேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் துறையூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பி. வேல்முருகனிடம் (குழந்தைகள் நலம்) ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் 5 வழங்கப்பட்டது.

இதில் துறையூர் நகர திமுக செயலர் மெடிக்கல் ந.முரளி உள்ளிட்ட திமுகவினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT