தற்போதைய செய்திகள்

கடலூரில் மிலிட்டரி கேன்டீனுக்கு சீல்

DIN



கடலூர்: கடலூர் மிலிட்டரி கேன்டீனில் மலிவு விலை பொருள்களை வாங்க வந்தவர்கள்  சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக கிடைத்த தகவலின் படி வருவாய் மற்றும் நகராட்சி துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கேன்டீனுக்கு சீல் வைத்தனர். 

கடலூர் புதுப்பாளையத்தில் தேசிய மாணவர் படை (கடற்படை) பிரிவின் நியாய விலை கடை (மிலிட்டரி கேன்டீன்) செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது பணியில் உள்ள ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினருக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கப்படும். மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் பொருள்கள் பெறுவதற்கு அட்டை பெற்றுள்ளனர்.

வியாழக்கிழமை, அவர்களுக்கு மதுபானம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காலை 9 மணிக்கு திறக்கும் கடைக்கு காலை 5 மணி முதலே அட்டைதாரர்கள் குவிந்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக கிடைத்த தகவலின் படி, வருவாய் மற்றும் நகராட்சி துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கேன்டீனுக்கு சீல் வைத்தனர். 

பின்னர், கடலூர் வட்டாட்சியர் அ.பலராமனுடன் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சீல் அகற்றப்பட்டது.

சமூக இடைவெளியை பின்பற்றி பொருள்கள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டு மீண்டும் பொருட்கள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT