சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.41 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
துபைலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 1.41 கோடி மதிப்பிலான 3.22 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபைலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 1.41 கோடி மதிப்பிலான 3.22 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், துபையிலிருந்து அக்டோபர் 29 அன்று சென்னை வந்திறங்கிய பயணிகளை வெளியே செல்லும் வாயிலில் சுங்க அதிகாரிகள் இடைமறித்து பரிசோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க | ‘சூடானுக்கு விரைவில் புதிய பிரதமர்’: ராணுவத் தளபதி அறிவிப்பு
Advertisement
Advertisement
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடைக்குள் வைத்து மறைத்து கடத்தி வரப்பட்ட 3.22 கிலோ கிராம் தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இருவேறு பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையைத் தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.1.41 கோடி ஆகும்.
இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.