தற்போதைய செய்திகள்

மதுரை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கம்

மதுரை விமான நிலைய குப்பைத்தொட்டியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினருக்கு பயந்து பயணி ஒருவர் வீசி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மதுரை: மதுரை விமான நிலைய குப்பைத்தொட்டியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினருக்கு பயந்து பயணி ஒருவர் வீசி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபையிலிருந்து 170 பயணிகளுடன் விமானம் இன்று (வியாழக்கிழமை) மதுரை வந்ததையடுத்து, பயணிகள் கொண்டு வந்த உடமைகளை பல்வேறு கட்டங்களாக பரிசோதனை செய்தனர் சுங்கத்துறையினர்.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் குப்பைத் தொட்டியில் பேஸ்ட் போன்ற ஒரு பொருள் இருப்பதாக சுங்கத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சுங்கத்துறையினர் பேஸ்ட் போன்ற பொருளை கைப்பற்றி சோதனை செய்ததில் அதில் ரூ.14 லட்சத்து 36 ஆயிரத்து 472 மதிப்புள்ள 287 கிராம் தங்கம் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

துபையிலிருந்து வந்த பயணி ஒருவர் இந்த பேஸ்ட்டை கொண்டு வந்திருக்கலாம் எனவும், சுங்கத்துறையினருக்கு பயந்து அவர் குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் எனவும் சுங்கத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக குப்பைத் தொட்டியில் யார் தங்கத்தை வீசி சென்றது என்பது குறித்து விமான நிலையத்திற்குள் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாரி மீது காா் மோதல்: 3 இளைஞா்கள் உயிரிழப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள்: ஆட்சியா் வழங்கினாா்

நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி

சேலத்தில் இன்று மயானக் கொள்ளை விழா

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம்: டி.எம்.செல்வகணபதி எம்.பி அறிக்கை

SCROLL FOR NEXT