முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் முக்கிய குற்றவாளியை ஹரியாணா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:55 PM
பகிர்:


திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் முக்கிய குற்றவாளியை ஹரியாணா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த பிப்ரவரி மாதம் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தி நான்கு ஏடிஎம் மையங்களில் காஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.72.79 லட்சம் பணத்தை அள்ளிச்சென்றது வடமாநில கொள்ளைக் கும்பல்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிரவலையை ஏற்படுத்தியது. 

Advertisement

இந்த வழக்கை வடக்கு மண்ட ஐ.ஜி கண்ணன் உத்தரவின்படி, வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி மேற்பார்வையில், நான்கு எஸ்.பி.க்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ராஜஸ்தான், ஹரியாணா போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் தீவிர வேட்டையில் ஈடுபட்டு அடுத்தடுத்து கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரொக்கப்பணம், கார்கள், கன்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவேத்தை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம், 3 கார்கள், ஒரு கன்டெய்னர் லாரி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments