சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இவர் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அமரன் எனப் பெயரிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் புரோடக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.
இந்நிறுவனத்தின் மூலம் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் குரங்கு பெடல் என்ற புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை கமலகண்ணன் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
குரங்கு பெடல் படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.