கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வேலை நேரம் மீண்டும் மாற்றியமைப்பு

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வேலைநேரத்தை மீண்டும் மாற்றியமைத்து புதுவை மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வேலைநேரத்தை மீண்டும் மாற்றியமைத்து புதுவை மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நிகழ் கல்வியாண்டு (2024-25) முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மத்திய இடைநிலை கல்வி வாரியப் பாடத் திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜூலை 15 -ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் நேரத்தை மாற்றி அமைத்து புதுச்சேரி அரசின் கல்வித் துறை உத்தரவிட்டது.

அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி முதல் காலை 9 மணிக்கு பள்ளிகள் தொடங்கும். காலை 9.15 வரை இறைவணக்க நிகழ்ச்சி நடைபெறும். தினமும் மொத்தம் 8 பாடவேளைகள் நடைபெறும். காலை 4 பாடவேளைகளும், பிற்பகல் 4 பாடவேளைகளும் நடைபெறும். காலையில் முதல் இரு பாடவேளைகள் முடிந்த பிறகு காலை 10.45 மணி முதல் 10.55 மணி வரையில், இடைவேளை விடப்படும்.

மதியம் உணவு இடைவேளையானது பிற்பகல் 12.25 மணி முதல் 1.30 மணி வரை இருக்கும். மதியம் இரு வகுப்புகள் முடிந்த பிறகு பிற்பகல் 2.50 மணி முதல் 3 மணி வரை இடைவேளை இருக்கும். காலையில் நடைபெறும் ஒரு பாடவேளை 45 நிமிஷங்களும், பிற்பகல் ஒரு பாடவேளை 40 நிமிஷங்களும் இயங்கும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பாட வகுப்புகள் நேர மாற்ற உத்தரவு பொருந்தும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளிகள் தொடங்கும் நேரத்தை மீண்டும் மாற்றியமைத்து புதுச்சேரி அரசின் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் காலை 9 மணிக்குப் பதிலாக 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கும்.காலை 9.30 வரை இறைவணக்க நிகழ்ச்சி நடைபெறும்.

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.25 வரை மூன்று பாடவேளைகளும் நடைபெறும்.

மதியம் உணவு இடைவேளையானது 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மதியம் உணவு இடைவேளையானது பிற்பகல் 12.40 மணி முதல் 1 மணி வரை இருக்கும்.

மதியம் இரு வகுப்புகள் முடிந்த பிறகு பிற்பகல் 2.50 மணி முதல் 3 மணி வரை இடைவேளை இருக்கும்.

காலையில் நடைபெறும் ஒரு பாடவேளை 45 நிமிஷங்களும், பிற்பகல் ஒரு பாடவேளை 40 நிமிஷங்களும் இயங்கும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பாட வகுப்புகள் நேர மாற்ற உத்தரவு பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக தொண்டர்கள் எங்கள் கட்சிக் கொடியவே தூக்க மாட்டாங்க... - செல்லூர் ராஜு

தேர்தல் நெருங்கும்போது மட்டும் மகளிர் உரிமைத் தொகை ஞாபகம் வருகிறதா?- நயினார் நாகேந்திரன் கேள்வி

டெம்பா பவுமா, கேசவ் மகாராஜ் அணியில் இல்லாதது பின்னடைவே, ஆனால்... மார்க்ரம் கூறுவதென்ன?

ஃபார்முக்கு திரும்பிய பிரேசில்..! அணியில் இடம்பெறாத நெய்மர் கூறியது என்ன?

ராம் அப்துல்லா ஆண்டனி டிரைலர்!

SCROLL FOR NEXT