சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் 
தற்போதைய செய்திகள்

சென்னையில் பரவலாக கனமழை!

சென்னையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக காற்றுடன் கனமழை பெய்து வருகின்றன.

DIN

சென்னையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக காற்றுடன் கனமழை பெய்து வருகின்றன.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஆக.7-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை வெப்பமான சூழல் நிலவி வந்த நிலையில் திடீரென வானிலை மாறி சுறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

அதன்படி, அம்பத்தூா், அண்ணா நகர், கோயம்பேடு, மதுரவாயில், நெற்குன்றம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் என பல்வேறு இடங்களில் பரவலாக லேசான காற்றுடன் மழை பெய்து வருகிறது. திடீா் மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.

இதேபோன்று புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், குன்றத்தூர், மாங்காடு, புளியந்தோப்பு, பட்டாளம் ஓட்டேரி, பெரம்பூர் வியாசர்பாடி ,திரு.வி.க நகர்,கொளத்தூர், ரெட்டேரி ,மாதவரம் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

மேலும் இந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் தற்போது வரை சீரமைக்கப்படாததால் அங்கங்கே மழை நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். மேலும், சாலைகளில் மழைநீா்த் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் எற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டுக்கொருவர் ஐ.ஏ.எஸ். அலுவலர்!

ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபிஎஸ்

அமெரிக்க வரி ஏதிரொலி: நிவாரணம் நாடும் ரத்தின மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள்!

மிடுக்கு... அஸ்வதி!

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கண்டனம்!

SCROLL FOR NEXT