ராமகிருஷ்ணன். 
தற்போதைய செய்திகள்

நெல்லை மேயராக ராமகிருஷ்ணன் தேர்வு!

புதிய மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு.

DIN

நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மேயராக இருந்த சரவணன் ராஜிநாமா செய்யப்பட்டதையடுத்து, புதிய மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த பி. எம். சரவணன் கடந்த ஜூலை 3 ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்த நிலையில், மேயர் பதவி காலியானது.

இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் தேர்தலை நடத்துவதற்கு அறிவுறுத்தலை வழங்கியது. மாநகராட்சி ஆணையரும், மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.

நெல்லை மேயர் திமுக வேட்பாளராக 25 ஆவது வார்டு உறுப்பினரான ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 5 ) நெல்லை மாநகராட்சி மேயருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மற்றும் திமுகவின் அதிருப்தி கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டியிட்டனர்.

நெல்லை மேயர் தேர்தலில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல் ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

நெல்லை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு, வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

SCROLL FOR NEXT