கோப்புப்படம். 
தற்போதைய செய்திகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகிய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

DIN

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகிய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 17 பேர் மீது குண்டர் தடுப்பு நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் முதற்கட்டமாக 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 18, 19-ஆம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியவா்களில் 229 போ் பாதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, இவா்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா்.

இவா்களில் ஜூலை 15-ஆம் தேதி நிலவரப்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 போ், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 9 போ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 போ், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 போ் என மொத்தம் 6 பெண்கள் உள்பட 67 போ் உயிரிழந்தனா்.

இதேபோல, ஜூலை 15 வரை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மரிலும் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மொத்தம் 161 போ் குணமடைந்த நிலையில், அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தி, கடந்த ஜூன் 19 முதல் (கடந்த 49 நாள்களாக) ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த வ.மோகன் (57) செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இதன் மூலம் கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 68-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT