கிருஷ்ண ஜெயந்தி DIN
தற்போதைய செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி: நாடு முழுவதும் ரூ. 25,000 கோடி வர்த்தகம்!

கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்கள் சநாதந பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியாக உள்ளது.

DIN

கிருஷ்ண ஜெயந்தி விழாவால் நாடு முழுவதும் ரூ. 25,000 கோடிக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், பூக்கள், பழங்கள், இனிப்பு வகைகள், அலங்கார உடைகள், அலங்காரப் பொருள்கள், பால், தயிர், வெண்ணெய், உலர் பழங்கள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்கள் சநாதந பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியாகவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதாகவும் உள்ளதாக பிரவீன் கண்டேல்வால் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டதாகவும், குறிப்பாக வட மற்றும் மேற்கு இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டதாகவும் அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பிசி பார்தியா தெரிவித்தார்.

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று ஆக. 26 கொண்டாடப்பட்டது. பக்தர்கள் விரதம் இருந்து கோயில்கள் மற்றும் வீடுகளில் கிருஷ்ணரை வழிபட்டனர். கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.

இந்த மாத தொடக்கத்தில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷாபந்தன் பண்டிகையின்போது நாடு முழுவதும் ரூ.12,000 கோடி வர்த்தமாகும் என்று எதிர்பார்த்ததாக அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சந்தைகளில் அதிகளவில் கூட்டம் குவிவதால், மக்கள் பண்டிகையை கொண்டாடுவதில் அதிகம் ஆர்வம் செலுத்துவதாக வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT