விரைவில் திமுக ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும்: அண்ணாமலை
விரைவில் திமுக ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விரைவில் திமுக ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி:
சட்டமன்றத் தேர்தல் நெருங்கின்ற வேளையில், திமுக ஃபைல்ஸ் 3 ஆம் பாகம் வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும்
Advertisement
Advertisement
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை, கலைஞர் கைவினை திட்டம் என பெயரிட்டு தமிழக அரசு அமல்படுத்துகிறது. இறுதியில் அவர்கள் மத்திய அரசிடம்தான் நிதி கேட்டு வருவார்கள், கிடைக்கவிட்டால், வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று வசனம் பேசுவார்கள்.
டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை வரும் 12ம் தேதி சந்திக்க உள்ளோம். அவரை சந்தித்த பின் ஒரு நல்ல முடிவோடு வருவோம்.
டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் நாடகமாடியுள்ளார். முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்னைக்காக அவர் பதவி விலக வேண்டும்.
விருதுநகரில் எஸ்ஐ மாரிமுத்து தாக்கப்பட்டுள்ளார். அதேபோன்று தமிழகம் முழுவதும் போலீஸார் மீதான தாக்குதல் தொடர்கிறது. இது கண்டிக்கத்தக்கது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளததை எடுத்துக்காட்டுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதால் இந்தியாவில் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப் புலிகள் போராட்டம், பல்வேறு பழிவாங்கும் படுகொலை நிகழ்த்தியதால் அது பயங்கரவாத இயக்கமாக மாறியது.
எனவே, இலங்கையிலும், இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை.
கடந்த மூன்றுமாத காலமாக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர பணியாற்றியுள்ளனர். இதனால் பாஜக எழுச்சி கண்டுள்ளது என்றார்.
ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது குலக்கல்வி இல்லையா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.