தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்  
தற்போதைய செய்திகள்

சரத் பவாருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சரத் பவார் வியாழக்கிழமை(டிச.12) தனது 84 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையொட்டி அவருக்கு தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சரத்பவாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

பொதுவாழ்விலும் நாட்டின் வளர்ச்சியிலும் தங்களது அளப்பரிய பங்களிப்புகள் பெரும் ஊக்கமாக விளங்குகின்றன.

தங்களது சீரிய தலைமை தொடர, நல்ல உடல்நலத்துடனும் வலிவோடும் தாங்கள் திகழ விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட தொண்டர்: தாயின் விடியோ குறித்து இளைஞர் விளக்கம்!

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஆற்றைக் கடக்க ஆட்டுத்தோலைப் பயன்படுத்திய அசிரியன் போர் வீரர்கள்!

நல்லகண்ணு உடல்நிலை: நலம் விசாரித்த விஜய்!

SCROLL FOR NEXT