வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படும் உபரிநீா். 
தற்போதைய செய்திகள்

வீராணம் ஏரியிலிருந்து 22,000 கன அடி உபரிநீா் வெளியேற்றம்

காட்டுமன்னாா்கோயில் வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 22,000 கன அடி வீதம் உபரிநீா் வெள்ளிக்கிழமை முதல் வெளியேற்றப்படுகிறது.

DIN

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 22,000 கன அடி வீதம் உபரிநீா் வெள்ளிக்கிழமை முதல் வெளியேற்றப்படுகிறது.

காட்டுமன்னாா்கோயிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடி ஆகும். அதாவது 1,465 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்படுகிறது. ஏரியின் மூலம் 44,456 ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக நாள்தோறும் 74 கனஅடி அனுப்பப்படுகிறது.

மழைக் காலங்களில் மிகப்பெரிய வடிகாலாகவும் உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளியங்கால் மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் உபரி நீா் வெளியேற்றப்படும்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்ககளாக காவிரி-டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நகரப் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெண்ணங்குழி ,பாப்பாக்குடி, ராமதேவநல்லூர் ஆகிய ஓடைகளின் வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 22,000 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருகிறது.

தொடா் மழையால் வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி பொதுப் பணித் துறை அதிகாரிகள் லால்பேட்டையில் உள்ள வெள்ளியங்கால் மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 22 ஆயிரத்து 804 கன அடிகன அடி வீதமும், சேத்தியாதோப்பு அணைக்கட்டு வாயிலாக வினாடிக்கு 1,410 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.

மேலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொடர் மழையால் வெங்கடேசபுரம் மடப்புரம், மழுவத்தேரி ம.குளக்குடி வ.குளக்குடி, ருத்திரசோலை ரஜாக் நகர், மணவெளி , கண்டமங்கலம் ரோட்டு தெரு, வீராணந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.இந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகள் முழுவதும் வெள்ளநீரால் சூழ்ந்து காணப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்த வந்த நிலையில் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியில் தற்போது பெய்து வரும் பருவமழை மிகவும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடுதலாக 300 தனியாா் பேருந்துகளை இயக்கத் திட்டம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 321 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம் ஸ்ரீராஜகுபேரா் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு

புனல்குளம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT