திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 301 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.  
தற்போதைய செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 301 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

DIN

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 301 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு சார்பில் புதிய மற்றும் முடிவுற்ற 57 திட்டப் பணிகளை ரூ.301.80 கோடி மதிப்பீட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் தலைமை வைத்தார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 250.48 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகளையும், ரூ.51.32 கோடி மதிப்பீட்டில் 38 முடிவற்ற திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்.

மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 300 பயனாளிகளுக்கு ரூ 9.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் .

இந்தக் கூட்டத்தில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மக்களவை உறுப்பினர்கள் சுப்பராயன், பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் எஸ்.லட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை சந்திப்பில் பாரதிக்கு புதிய சிலை அமைக்கக் கோரி மனு

அறந்தாங்கி அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: 3,500 போலீஸாா் பாதுகாப்பு

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிர போராட்டம்! பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம்! 2 போ் உயிரிழப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT