தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 57,080-க்கு விற்பனை.
சென்னையில் தங்கம் விலை சனிக்கிழமை (டிச. 28) சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 57,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கும், ஒரு கிராம் ரூ.7,135-க்கும், சவரன் ரூ. 56, 800-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ. 99.90-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 99,900- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.