முகப்பு
தற்போதைய செய்திகள்

44 மின்சார ரயில்கள் ரத்து: கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

புறநகர் மின்சார ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 3:25 AM
கோப்புப்படம்
பகிர்:

புறநகர் மின்சார ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோடம்பாக்கம் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் மெட்ரோ ரயில்களுக்கு மாற்றாக காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை, வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இந்த அட்டவணை மாற்றம் இன்று (பிப். 18) ஒரு நாள் மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகா் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →