DOTCOM
தற்போதைய செய்திகள்

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா புதன்கிழமை தாக்கல் செய்தார்.

DIN

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இதில், கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இரண்டு சீருடைகள், 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலணிகள், வண்ண அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 5 பச்சை வண்ணப் பலகைகள், 225 பள்ளிக்கு தலா 4 சிசிடிவி கேமிராக்கள், 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் சுற்றுலா உள்ளிட்டவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கும் கட்சி: அண்ணாமலை

"தினமணி Save Lives!" ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது விழாவில் சி.பி. ராதாகிருஷ்ணன்

திகார் சிறையில் உள்ள உமர் காலிதுக்கு கடிதம் எழுதிய நியூயார்க் மேயர்! பாஜக கண்டனம்!

தஞ்சை தமிழ்ப் பல்கலை. இணையதளத்தில் எம்ஜிஆர் பெயர், படம் நீக்கம்: இபிஎஸ் கண்டனம்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT