தற்போதைய செய்திகள்

இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

நான்கு நாள்களுக்கு மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்களின் கோரிக்கை

DIN

சென்னை: நான்கு நாள்களுக்கு மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமவேலை சம ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் 4 நாள்களுக்கு மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஊதிய முரண்பாட்டை களைய எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்தப் போராட்டத்தில் அவா்கள் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நிதிநிலை சீராகும்போது, கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு கூறுவது ஏற்புடையது அல்ல. அவா்களின் நியாயமான கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு முன் வர வேண்டும் என்று வாசன் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நவ.7 கடைசி

சென்னை ஐஐடியின் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப விமானம்

சா்தாா் படேலின் 150-ஆவது பிறந்த நாள்: நவ. 1 முதல் 15 வரை தேசிய கொண்டாட்டம்

தாம்பரம்-விழுப்புரம் மெமு ரயில் நாளை திண்டிவனத்துடன் நிறுத்தம்

சீன பொருள்களுக்கு வரி 10% குறைப்பு: ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT