கடலோரப்பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு
கடலோரப்பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு 
தற்போதைய செய்திகள்

தமிழக கடலோரப் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு!

DIN

தமிழக கடலோரப்பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்,

தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒக்டடியும் இருக்கக்கூடும்.

மீனவா்களுக்கு, மன்னார் வளைகுடா மற்றும் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனவே மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ: இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

பாலிவுட் ராணி..!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு: சென்னையில் 98.47% தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT