தற்போதைய செய்திகள்

'கல்கி 2898 ஏடி' வசூல்: 4 நாள்களில் இத்தனை கோடிகளா?

பிரபாஸ் நடித்து வெளியான ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் 4 நாள்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

DIN

பிரபாஸ் நடித்து வெளியான ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் 4 நாள்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் கடந்த ஜூன் 27-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மூன்று நாள்கள் முடிவில் 'கல்கி 2898 ஏடி' மொத்தமாக ரூ. 415 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாள்களில் ரூ. 555 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேள்விகளால் பீதி.. பொய்களுக்குள் தஞ்சமடைந்த பிரதமர் மோடி: ராகுல் விமர்சனம்!

எப்போதும்போல அப்பட்டமான பொய்: பிரதமர் மோடி உரையாடல் மீது காங்கிரஸ் விமர்சனம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்!

ரஷியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி! சீனா வருத்தம்

SCROLL FOR NEXT