முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக நிர்வாகி வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க வேஷ்டி - சட்டைகள்! - எடுத்து வீசி பாமக போராட்டம்

விழுப்புரம் அருகே திமுக கிளைச் செயலர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த வேஷ்டி - சட்டைகளை எடுத்து வீசி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Updated On : 3 ஜூலை, 2024 at 6:26 AM
விழுப்புரம் அருகே திமுக கிளைச் செயலர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த வேஷ்டி - சட்டைகளை எடுத்து வீசி போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திமுக கிளைச் செயலர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த வேஷ்டி - சட்டைகளை எடுத்து வீசி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காணை ஒன்றியத்துக்குள்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுக கிளைச் செயலர் வீட்டில் பரிசுப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக பாமகவினருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையிலான பாமகவினர், திமுக கிளைச் செயலர் ராமலிங்கம் வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய சட்டைகள், வேஷ்டிகள் உள்ளிட்டவற்றை வெளியே தூக்கி வந்து, தெருவில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் அலுவலர்களும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகக் கூறி அவர்கள் முழக்கமிட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

முழு கட்டுரையைப் படிக்க →