தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.54,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.54,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை படிப்படியாக குறைந்து ரூ. 53,000-ஆக விற்பனை செய்யப்பட்டது. சென்ற வாரம் தொடக்கம் முதல் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கி ஒரு சவரன் ரூ. 54,000-ஐ கடந்து விற்பனையானது.
இந்த நிலையில், இன்று(ஜூலை 8) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.6,800-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 54,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ரூ. 99.50-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 200 உயர்ந்து ரூ. 99,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.