அனைத்துக் கட்சிக் கூட்டம். 
தற்போதைய செய்திகள்

பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடருக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

DIN

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை(ஜூலை 22) தொடங்கவுள்ள நிலையில், மத்திய அரசின் அழைப்பின்பேரில் இன்று (ஜூலை 21) அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ், திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். நடப்பாண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்றதால், மழைக்கால கூட்டத் தொடா் பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டது. ஜூலை 22-இல் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை 19 அமா்வுகளுடன் இக்கூட்டத் தொடா் நடைபெறுகிறது.

ஜூலை 23-இல் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். 2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை அவா் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT