பிரதமர் மோடி 
தற்போதைய செய்திகள்

நடுத்தர மக்களுக்கு அதிகாரமளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

DIN

நடுத்தர மக்களுக்கு அதிகாரமளிக்கும் பட்ஜெட்டாக மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளியில் மக்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

”இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. சமூகத்தில் உள்ள அனைவரும், தனிப்பட்ட நபரும், ஒவ்வொரு வீடும் வளர்ச்சி பெற வேண்டும் என பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களில் பணியாற்ற முடியும். கல்வி மற்றும் திறமையை ஊக்குவிக்கும் பட்ஜெட்டாக உள்ளது.

சிறு குறு வியாபாரிகள், நடுத்தர வர்க்க வியாபாரிகள், பெண்கள் என அனைவரும் இந்த பட்ஜெட்டால் பலன் அடைவார்கள்

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த பட்ஜெட் அதிகாரத்தைக் கொடுக்கிறது” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

14,000 டி20 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரராக அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனை!

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: மோடியிடம் பேசிய சீன அதிபர்!

பெனால்டியில் வென்றுகொடுத்த ப்ரூனோ..! யுனைடெட் அணிக்கு முதல் வெற்றி!

தெருநாய்களுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்: நீதிபதி நகைச்சுவை

ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த மோகன்லால்!

SCROLL FOR NEXT