முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை ரூ.240 குறைவு: இன்றைய நிலவரம்!

வெள்ளியின் விலையும் குறைந்தது.

Updated On : 30 ஜூலை, 2024 at 5:04 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ. 240 குறைந்து விற்பனையாகிறது.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தொடா்ந்து 4 நாள்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,280 வரை அதிரடியாக குறைந்தது.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.51,720-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சென்னையில், திங்கள்கிழமை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,415-க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 51,320-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று(ஜூலை 30) ஒரு கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ.6,385-க்கும், சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 51,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ. 89-க்கும், ஒரு கிலோ (கட்டிவெள்ளி) ரூ. 500 குறைந்து ரூ. 89,000-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →