முகப்பு
தற்போதைய செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.3 லட்சம் நிதியுதவி

Updated On : 31 ஜூலை, 2024 at 6:56 AM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளம் மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பணியாற்றிவந்த நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு 1 கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாணகுமார் (52) செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கேரள மாநிலம் வயநாட்டில் பெருமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் கேரள அரசு துறைகளுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக மீட்பு சாதனங்களுடன் புதன்கிழமை சென்றுள்ள தமிழ்நாடு தீயணைப்புத் துறை இணை இயக்குநர் தலைமையிலான 20 தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவின் 20 வீரர்கள்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த கல்யாணகுமார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காலம்சென்ற கல்யாணகுமார் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.