பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வெற்றி!
உத்திரப்பிரதேசத்தின் நகினா தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் 'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத் வெற்றி பெற்றுள்ளார்.
ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் 'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவருமான சந்திரசேகர ஆசாத் உத்திரப்பிரதேசத்தின் நகினா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய அளவில் முக்கிய தலித் செயற்பாட்டாளராக அறியப்படும் சந்திர சேகர் ஆசாத் உ.பி.யின் நகினா தொகுதியில் 5,12,552 வாக்குகளுடன் பாஜகவின் வேட்பாளர் ஓம் குமாரை விட 1,51,473 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2022 உ.பி சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்துப் போட்டியிட்டு 4,501 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்த சந்திர சேகர் ஆசாத், இந்த முறை ஆசாத் சமாஜ் கட்சியின் ஒரே வேட்பாளராக களம் கண்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.