தற்போதைய செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜி திருமணம்

DIN

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயில் வளாகத்தில் திரைப்பட இயக்குனர் கங்கை அமரன் மகனும் நடிகருமான பிரேம்ஜி - இந்து திருமணம் மிகவும் எளிமையான முறையில் இன்று காலை நடைபெற்றது.

கங்கை அமரன் அவரது மூத்த மகன், திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் திரைப்பட நடிகர்கள் சிவா, சந்தான பாரதி, ஜெய், கார்த்திக் ராஜா உட்பட திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் நடைபெற்று மணமக்கள் முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற பிரேம்ஜி திருமணத்தில் பங்கேற்ற திரைப்பட நட்சத்திரங்களை காண சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT