தற்போதைய செய்திகள்

பாலியல் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது; 2 பெண்கள் மீட்பு

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக 34 வயது பெண் ஒருவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

DIN

தாணே: மகாராஷ்டிரம் மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக 34 வயது பெண் ஒருவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அங்கிருந்த இரண்டு பெண்களை மீட்டுள்ளனர்.

மகாராஷ்டிரம் மாநிலம் தாணே மாவட்டம்,மும்ப்ரா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாலியல் தொழில் நடந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், மனித கடத்தல் தடுப்புப் பிரிவினர் மும்ப்ரா நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாலியல் தொழிலில் நடத்தி வந்த 34 வயது பெண் ஒருவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த இரண்டு பெண்களை மீட்டுள்ளதாக மூத்த ஆய்வாளர் சேதனா சௌத்ரி கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஒழுக்கக்கேடான போக்குவரத்து (தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT