திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், மாநகர காவல் துறையினர், ரயில்வே காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்திற்கிடமான பொருள்கள், பைகள் ஏதேனும் உள்ளனவா என்பதை குறித்து ஆய்வு செய்து வந்தனர்.
மாலை நேரத்தில் பயணிகள் அதிகளவில் வருகை தரும் வேளையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறை வாகனங்களும் ரயில் நிலையத்தின் அருகே நிறுத்தப்பட்டன, ரயில் நிலையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள்(42) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.