"கள்ளங்கபடம் இல்லாத கள்ளக்குறிச்சியை" - "கள்ளச்சாராய குறிச்சியாக" மாற்றியதுதான் திராவிட மாடல் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளங்கபடம் இல்லாத கள்ளக்குறிச்சியை" - "கள்ளச்சாராய குறிச்சியாக" மாற்றியதுதான் திராவிட மாடல்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களை நினைத்து வேதனை அடைகிறேன். கவலைக்கிடமாக இருப்பவர்களை நினைத்து கவலை அடைகிறேன். அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
கள்ளச்சாராயமோ.... எந்த சாராயமோ.... இல்லாத ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்.... என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.