தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.680 குறைந்து ரூ. 53,560-க்கு விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.680 குறைந்து ரூ. 53,560-க்கு விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ. 53,600-க்கும், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ. 6,780-க்கும், பவுனுக்கு ரூ. 640 உயா்ந்து ரூ. 54,240-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ. 53,560-க்கும், கிராமுக்கு 85 குறைந்து ரூ.6,695-க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 குறைந்து ரூ. 96.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 2000 குறைந்து ரூ. 96,500-க்கும் விற்பனையாகிறது.