தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு 
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணிநேரத்துக்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை(ஜூன் 28) 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Venkatesan

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை(ஜூன் 28) 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் ஜூலை 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 28,29-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை அடுத்த 2 மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அறிவிப்பின்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT