முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்: மடாதிபதி, உதவியாளர் கைது!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மடாதிபதியை போலீசார் கைது செய்தனர்.

Updated On : 9 மார்ச், 2024 at 5:45 AM
பகிர்:

பெங்களூரு: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மடாதிபதியை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் உடந்தையாக இருந்த அவரது உதவியாளரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகம் மாநிலம், துமகூரு மாவட்டம் ஹங்கரனஹள்ளி கிராமத்தில் ஹங்கரனஹள்ளி வித்யா சவுடேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான மடத்தின் மடாதிபதியாக பால மஞ்சுநாத சுவாமி(37) இருந்து வருகிறார். அவருக்கு தோல் நோய் இருந்துள்ளது. இதுகுறித்து தனது முன்னாள் உதவியாளர் அபிஷேக்கிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவர் என இளம்பெண் ஒருவரை மடாதிபதிக்கு சிகிச்சை அளிக்க அழைத்து வந்துள்ளார்.

ஆனால் அந்த இளம்பெண் மருத்துவரிடம் தனது உடலில் உள்ள தோல் நோய் பிரச்னைகளை காண்பிக்க மடாதிபதி மறுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் வாட்ஸ்ஆஃப் எண்ணுக்கு தன்னுடைய தோல் நோய் சம்மந்தமான புகைப்படங்களை அனுப்பி விடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார்.

அதனை இளம்பெண் மருத்துவரும், மடாதிபதியின் முன்னாள் உதவியாளர் அபிஷேக்கும் செல்போனில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதனை வைத்து மடாதிபதியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து பிப்ரவரி 10 ஆம் தேதி மடாதிபதி தற்போதைய உதவியாளர் அபிலாஷ் மூலம், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடரந்து சைபர் கிரைம் போலீசார் இளம்பெண் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், அபிஷேக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அபிஷேக், மடாதிபதி தனது மடத்தில் 18 வயது நிரம்பாத சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு காவல் கண்காணிப்பாளர் அசோக் கேவி தலைமையிலான போலீசார் இரவு மடத்திற்கு வந்த சோதனையில் ஈடுபட்டனர். சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். சிறுமியை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஹூலியூர் துர்கா போலீசார், மடாதிபதி பால மஞ்சுநாதசுவாமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் அபிலாஷ் இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மடாதிபதி மிகவும் செல்வாக்கு மிக்கவராகவும், மாநிலத்தில் உள்ள பல அரசியல்வாதிகளின் செல்வாக்கைப் பெற்றவராகவும் இருப்பதால், காவல் கண்காணிப்பாளர் இரவு நேரத்தில் கைது நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.