தற்போதைய செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

வேங்கைவயல் விவகாரத்தில், 3 பேருக்கு குரல் மாதிரிப் பரிசோதனை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் விவகாரத்தில், 3 பேருக்கு குரல் மாதிரிப் பரிசோதனை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சிக்கு உள்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் குடியிருப்புக்கான மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையானது.

இது விவகாரம் தொடா்பான வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்த வழக்கில் ஏற்கெனவே, 5 சிறுவர்கள் உள்பட 31 பேருக்கு மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 1 காவலர் உள்ளிட்ட இருவருக்கு குரல் மாதிரிப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் 3 பேருக்கு குரல் மாதிரிப் பரிசோதனை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் புதன்கிழமை நடத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறை; முதல் நாளிலேயே சூடுபிடித்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்!

ஒவ்வொரு நாளுக்கும் நன்றி... பிரியங்கா மோகன்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

கண் கவர மறையும் சூரியன்... ரைசா வில்சன்!

SCROLL FOR NEXT