தற்போதைய செய்திகள்

206 பொதுக்கூட்டங்கள், 80 நேர்காணல்கள்! பஞ்சாபில் தேர்தல் பிரசாரத்தை முடித்தார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூரில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ளார்.

DIN

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூரில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ளார்.

75 நாள்கள் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மக்களவைத் தேர்தலுக்காக மட்டும் 206 பேரணிகளில் பங்குகொண்டதாகவும், ஊடகங்கள்கு 80 நேர்காணல்களை வழங்கியதாகவும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் அவர் கலந்துகொண்ட வாகனப் பேரணிகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூரில் தனது இறுதி தேர்தல் பிரசாரத்தை முடித்துகொண்டு, தியானத்துக்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறாா்.

சுற்றுலா மாளிகை ஹெலிகாப்டா் தளத்தில் இருந்து காா் மூலம் பகவதி அம்மன் கோயிலுக்கு செல்கிறாா். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.

தொடா்ந்து, பகவதி அம்மனை மோடி தரிசித்துவிட்டு, காா் மூலம் படகு இல்லத்துக்கு சென்று தனிப்படகில் விவேகானந்தா் மண்டபத்தை அடைகிறாா். இன்று மாலை 6 மணிக்கு விவேகானந்தா் பாறைக்கு செல்லும் பிரதமா் மோடி தியான மண்டபத்தில் அமா்ந்து தியானத்தை தொடங்குகிறாா்.

ஜூன் 1 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை தொடா்ந்து 45 மணி நேரம் தியானத்தில் இருக்கிறாா். தியானத்துக்காக மோடி 2 நாள் இரவு விவேகானந்தா் மண்டபத்தில் தங்குகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT