கனா காணும் காலங்கள் தொடர் பிரபலத்தின் புதிய சீரியல்!
நடிகர் பரத்குமார் - அபி நட்சத்திரா நடிக்கும் புதிய தொடர்
கனா காணும் காலங்கள் -2 தொடர் பிரபலத்தின் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் உள்ளனர். தற்போது உள்ள சூழலில் தொடர்களை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம்தலைமுறையினரும் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.
இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு இனியா தொடர் நிறைவடைந்த நிலையில், நேற்று(நவ. 4) முதல் ரஞ்சனி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் தொடர்களே டிஆர்பியில் எப்போதும் முன்னணியில் இருக்கிறது. கயல், மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே தொடர்கள் பல வாரங்களாக முதல் 3 இடங்களைப் பிடித்து வருகிறது.
இந்த நிலையில், கனா காணும் காலங்கள் -2 தொடரில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பரத்குமார். இவர் விஜய் சேதுபதி சாயலில் இருப்பதால் சின்னத்திரை விஜய் சேதுபதி என்று மக்களால் அழைப்படுகிறார்.
இவர் சன் தொலைக்காட்சியில் தொடங்கவுள்ள புதிய தொடரொன்றில் நடிக்கிறார். இந்த புதிய தொடருக்கு உன்னை சரணடைந்தேன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விஜய் - 69: வெளிநாட்டு உரிமத் தொகையில் சாதனை!
இந்த தொடரில் பரத்குமாருக்கு ஜோடியாக அயலி இணையத் தொடரில் நடித்த அபி நட்சத்திரா நடிக்கிறார். அபி நட்சத்திரா தர்மதுரை, மூக்குத்தி அம்மன், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
நடிகர் பரத்குமார் - அபி நட்சத்திரா இணைந்து நடிக்கும் உன்னை சரணடைந்தேன் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.