கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  
தற்போதைய செய்திகள்

கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.8) ஒருநாள் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

DIN

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் நவ.13 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.8-ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர்மழை பெய்து வருவதை அடுத்தில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவாரூா் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.8) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 12 பேர் காயம்

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

பங்குச்சந்தை முதலீடு: அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம்!!

மெஸ்ஸி மேஜிக், ஜோர்டி ஆல்பா ஓய்வு: இன்டர் மியாமி அபார வெற்றி!

SCROLL FOR NEXT