நடிகை கஸ்தூரிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல். 
தற்போதைய செய்திகள்

நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 வரை நீதிமன்றக் காவல்!

நடிகை கஸ்தூரிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்.

DIN

நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடர்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார் எழுந்தது.

இதுதொடா்பாக அவா் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருநகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

இதனிடையே, நடிகை கஸ்தூரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருந்த நிலையில், அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் ஞாயிற்றுகிழமை காலை சென்னை அழைத்து வந்தது. பின்னர் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணையை முடித்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT