தற்போதைய செய்திகள்

உ.பி. இடைத்தேர்தல்: பாஜக முன்னிலை!

பாஜக 3 தொகுதிகளில் முன்னிலை.

DIN

உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த 9 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று(நவ. 22) எண்ணப்பட்டு வருகிறது.

கடந்த பேரவைத் தேர்தலில் மில்கிபூா் தொகுதியில் வென்ற சமாஜவாதி கட்சியின் தற்போதைய எம்.பி. அவதேஷ் பிரசாத்துக்கு எதிராக பாஜக வேட்பாளா் தொடர்ந்த தேர்தல் மோசடி வழக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனால், உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் தவிர மற்ற 9 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் காஜியாபாத், புல்பூர், கைர் மூன்று தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதேபோல் சிஷாமௌ, கா்ஹால் ஆகிய இரண்டு தொகுதிகளில் சமாஜவாதி கட்சி முன்னிலையில் உள்ளது.

மற்ற 4 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் விரைவில் வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT