மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்  
தற்போதைய செய்திகள்

தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது: நிர்மலா சீதாராமன்

எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கருத்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளன்று பட்டய கணக்கர்(சி.ஏ) தேர்வுகள் நடத்துவதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு பொங்கல் திருநாளில் தேர்வுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதைக் கைவிட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியிருப்பதாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, திமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக நிர்வாகி ஒருவர் தனது வலைதள பக்கத்தில், ‘தமிழர் விரோத மத்திய பாஜக அரசு!! தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை நடத்துகிறது!! தீபாவளி அன்று தேர்வு நடத்துவீர்களா?’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனை மேற்கோள் காட்டி பாஜக மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா, ‘சி.ஏ தேர்வுகளுக்கான தேதிகள் ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்பால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர நிதியமைச்சகத்தால் அல்ல’ என்று பதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பொங்கல் அன்று அறிவிக்கப்பட்ட சி.ஏ தேர்வு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பாஜக மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யாவின் பதிவை மேற்கோள் காட்டி, ‘சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் “தமிழ் விரோதி” பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!

இல.கணேசன் உடலுக்கு மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அஞ்சலி

தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு! சென்னை வீட்டில் அறைகளின் பூட்டு உடைப்பு?

SCROLL FOR NEXT