நவ. 29, 30-ல் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! 
தற்போதைய செய்திகள்

சென்னை மக்கள் கவனத்துக்கு... நவ. 29, 30-ல் ஆரஞ்ச் அலர்ட்!

சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு.

DIN

சென்னைக்கு நவ. 29, 30 ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. இது அடுத்த 6 மணி நேரத்துக்குள் புயலாக வலுப்பெரும் என்று கூறப்படுகிறது.

புயல் சின்னம் 10 கி.மீ வேகத்தில் நகா்ந்து வருகிறது. நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

ஃபென்ஜால் எனப் பெயா் சூட்டப்படும் இந்தப் புயல் காரணமாக, நவ 29 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல, நவ. 30 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நவ. 29, 30-ல் சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT