புயல் எச்சரிக்கை காரணமாக, பொதுமக்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர். 
தற்போதைய செய்திகள்

கனமழை எதிரொலி: கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்!

புயல் எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்.

DIN

ஃபென்ஜால்’ புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ள நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்.

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.

இந்த புயலானது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை(டிச.1) காலை மரக்காணம்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபென்ஜால் புயல் கரையை நெருங்க தாமதம் தாமதமாக சென்னை மற்றும் புறநகர மாவட்டங்களில் அதிகரிக்கும்.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை கனமழை பெய்யக்கூடும்.

புயல் கரையைக் கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 50 கி.மீ முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 50 கி.மீ முதல் 90 கி.மீ. வேகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

புயல் தற்போது 7 கி.மீ.வேகத்தில் நகர்ந்து வருவதாகம், தற்போது சென்னைக்கு கிழக்கே 190 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.

காரைக்கால் - மாமல்லபுரம் இடையே சனிக்கிழமை மாலை புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழைக்கும் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தி பாதுகாத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னை, புறநகரில் 3 நாள்களுக்கு மழை!

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!

டி20-ல் புது வரலாறு..! தரவரிசையில் சாதனையுடன் முதலிடத்தில் அபிஷேக் சர்மா!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

SCROLL FOR NEXT