கோப்புப்படம். Din
தற்போதைய செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ஏசி ரயில்.

DIN

தீபாவளியை முன்னிட்டு, தாம்பரம்-நாகர்கோவில் மற்றும் தாம்பரம் - மானாமதுரை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்தில் இருந்து நாளை(அக்.30) பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ஏசி ரயில், மறுநாள் காலை 4.40 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுவழித்தடத்தில் அக். 31 ஆம் தேதி காலை 8.45-க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ஏசி ரயில் இரவு 9.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக இயக்கப்படுகிறது.

அதேபோல், தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு நாளை(அக். 30) மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுவழித்தடத்தில், சிறப்பு ரயில் மானாமதுரையில் இருந்து அக். 31 ஆம் தேதி காலை 11.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தடையும்.

இதைத் தவிர்த்து கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் நாளை காலை 9.35 மணிக்கும், மறுவழித்தடத்தில் திண்டுக்கல் - கோவை இடையே பிற்பகல் 2 மணிக்கும் இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முட்டை விலை ரூ. 5-ஆக நீடிப்பு

பாபநாசபுரத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.09 லட்சம் வாக்காளா்கள்

திருச்செந்தூா் கடலில் பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்ட தொழிலாளி

சாலையைப் பாதுகாப்பாக மாணவா்கள் கடக்கும் வகையில் அரசுப் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT